Saturday, July 2, 2011

இரவுகளின் இசை


எனக்கான பாடல்களை

கேட்டு கொண்டிருக்கிறென்.


தனிமையின் இரவுகளை

இசையால் நிரப்பி கொண்டிருகிறன்

பெருங் குடிகாரனை போல.


அது

மகிழ்ச்சியான தருனமாகவோ..

மனதை கனக்க செய்வதாகவொ..

வெருமையால் தளும்ப செய்வதாகவொ.

என் இரவுகளை

சாயம் கொள்ள செய்கிறது


கால பெருவெளியிலிருந்து

எனக்கான இசை

காதில் ரீங்காரமிட்டு

கொண்டெ இருக்கிறது.


துளி கண்ணிரையோ

சிறு புன்னகயையொ எந்தி கொண்டு.

வாழ்க்கை


கருப்பு கட்டங்களுக்கும்

வெள்ளை கட்டங்களுக்குமிடையே

அவரவர் இஷ்டம் போல

நகர்ந்து கொண்டும்

நகர்த்தப்பட்டு கொண்டும் இருக்கிறது

வாழ்க்கை...

சபிக்கப்பட்டோ ஆசிர்வதிக்கப்பட்டோ..

-மணியன்