Monday, August 9, 2010

வன பத்திரகாளி



உரல் சத்தமும்
உலக்கை சத்தமும்
கேட்காத....

அடர் வனத்தின்
நடுவில் விட்டிருந்தால்
வன பத்திரகாளி

கன முலை
தழுவும் சர்பங்களையே
மாலைகளாகவும்
சருகுகளை அர்ச்சனைகளாகவும்
கொண்டு

அரை நுற்றாண்டு
வரலாறுக்கு பிறகு

எழாவது நிழற் சாலையின்
முன்றாவது பிரிவில்
வன அம்பிகையாக
நகரின் நடுவில்
அருள் பாலித்து கொண்டு இருக்கிறாள்

நீங்கள் யாரேனும்
அவ்வழியே கடந்து சென்றால்
சருகுகள் கொண்டு அவளுக்கு
அர்ச்சனை செய்து வாருங்கள்

மன மகிழ்ந்து
வரமோ சாபமோ
அருளக்குடும்

மணியன்

1 comment:

SV Dheva said...

மணிக்கு எனது வாழ்த்துக்கள் முதலில்.

உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள்.

நட்புடன் - சே. வே. தேவா